''அரசியல்வாதியாக வேண்டும்...என்னுடைய கடைசி ஆசை'' - ரஜினி பட நடிகை
அரசியல்வாதியாவதுதான் தனது இறுதி ஆசை என்று அனந்திகா கூறினார்.;
சென்னை,
பெரும்பாலான நடிகைகள், கனவு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் அல்லது தொழிலதிபராக வேண்டும் என்பது போன்ற லட்சியங்களைப் பற்றி பேசுவார்கள், அரசியலில் நுழைய வேண்டும் என்று கூறுவது அரிது.
ஆனால் இளம் நடிகை அனந்திகா சனில்குமார் அதைத்தான் கூறியுள்ளார். தனது இறுதி ஆசை அரசியல்வாதியாக வேண்டும் என்று அவர் வெளிப்படையாகக் கூறினார்.
தமிழில் ரஜினியின் ''லால் சலாம்'', படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் அனந்திகா சனில்குமார். தற்போது அவர் "8 வசந்தலு" என்ற காதல் கதையில் நடித்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற 20-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், தனது இறுதி ஆசை அரசியல்வாதியாவதுதான் என்று கூறினார்.
அவர் கூறுகையில், "நடிப்புடன் சேர்ந்து, நான் சட்டமும் படித்து வருகிறேன். நான் ஒரு அரசியல்வாதியாகி தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். அதுதான் என்னுடைய கடைசி ஆசை. எனக்கு 40 வயது ஆகும்போது, அரசியலில் நுழைவது பற்றி தீவிரமாக யோசிப்பேன்," என்றார்.