அனிருத்தா - சம்யுக்தா திருமணம்: புதிய இன்னிங்ஸ் தொடங்க வாழ்த்திய பாவனா

முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருத்தா மற்றும் நடிகை சம்யுக்தா இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.;

Update:2025-11-28 14:32 IST

சென்னை ,

நடிகை சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இதன் பிறகு அவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தன. விஜய்யின் வாரிசு , காபி வித் லவ், துக்ளக் தர்பார், மைடியர் பூதம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மகன் , அனிருத்தா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்த் மற்றும் நடிகை சம்யுக்தா இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் சம்யுக்தாவின் நெருங்கிய தோழியும், தொகுப்பாளருமான பாவனா திருமண வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சம்யுக்தா... உன்னுடைய இதயம் மிக வலுவாக இருக்கிறது. கஷ்டமான காலங்களையும் கடந்து செல்லும் பலம் உன்னிடம் இருக்கிறது. இந்தத் திருமண நாளில் உனது முகத்தில் சிரிப்பு, பூரிப்பை பார்க்கிறேன். அதைவிட முக்கியமாக உன்னுடைய மனம் முழுவதும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது.

இறுதியாக உனக்கான இடத்தை தேர்ந்தெடுத்துவிட்டாய். அனிருத்தாவிடம் உனக்கான நிரந்தர இடத்தை அடைந்துவிட்டாய். உன்னுடைய மனது எதற்கெல்லாம் இத்தனை வருடங்களில் ஏங்கியதோ அதெல்லாம் கிடைக்கும் என்று நம்புகிறேன். அதேபோல், உன்னுடைய வீட்டின் நிரந்தர பிக்பாஸ் யாரென்று உனக்கே தெரியும். புதிய இன்னிங்ஸை தொடங்குவதற்கு வாழ்த்துகள்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்