ராம் சரண் படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகலா? - 'ஆர்.சி.16' படக்குழு மறுப்பு

ராம் சரண் தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார்.;

Update:2025-01-27 06:54 IST

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார்.

ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

கடந்த சில தினங்களாக ஏ.ஆர்.ரகுமான் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாக தகவல் பரவின. ஏனென்றால் இயக்குனர் புஜ்ஜி பாபு சனா இயக்கிய 'உப்பெனா' படத்திற்கு இசையமைத்தது தேவி ஸ்ரீ பிரசாத்தான். அப்படத்தின் பாடல்கள் இணையத்தில் கொண்டாடப்பட்டன.

இந்நிலையில், இந்த தகவலுக்கு 'ஆர்.சி.16' படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. "ஏ.ஆர்.ரகுமான் மாற்றம் குறித்து வெளியான செய்தியில் உண்மையில்லை. அது வெறும் வதந்தியே" என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்