’பார்டர் 2’ படத்தில் இணைந்த பிரபல பாடகர்...வைரலாகும் பர்ஸ்ட் லுக்
இப்படம் ஜனவரி மாதம் 23-ம் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
பிரபல பாலிவுட் இயக்குனர் ஜே.பி.தத்தா இயக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான போர் திரைப்படம் பார்டர். இப்படத்தில் சன்னி தியோல், சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
கடந்த ஜூன் மாதம் இப்படம் வெளியாகி 27 வருடங்கள் ஆகின. அப்போது, இப்படத்தின் 2ம் பாகம் உருவாவதாக படக்குழு தெரிவித்தது. இதனை பிரபல இயக்குனர் அனுராக் சிங் இயக்குகிறார். இவர் பார்டர் 2, 'கேசரி', 'பஞ்சாப் 1984', 'ஜாட் & ஜுலியட்' மற்றும் 'தில் போலே ஹடிப்பா' போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர். பார்டர் 2-ல் முதல் பாகத்தில் நடித்திருந்த சன்னி தியோலும் நடிக்கிறார்.
மேலும், வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் ஜனவரி மாதம் 23-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல பாடகரும் நடிகருமான தில்ஜித் டோசன்ஜ் இணைந்துள்ளார். அவரது பர்ஸ்ட் போஸ்ட்ர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.