’அவர் படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு’ - ’அகண்டா 2’ பட நடிகை
இந்த படத்தில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார்.;
சென்னை,
பத்து வருடங்களுக்கு முன்பு சல்மான் கானின் ’பஜ்ரங்கி பைஜான்’ படத்தில் சிறுமியாக நடித்து பல இதயங்களை கவர்ந்த ஹர்ஷாலி மல்ஹோத்ரா, இப்போது தனது 17 வயதில் நடிப்பு பயணத்தின் புதிய கட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் "அகண்டா 2" மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 5-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ஹர்ஷாலி பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அவர் பேசுகையில்,
"நான் ஒரு கதாநாயகியாக விரும்புகிறேன். குறிப்பாக சஞ்சய் லீலா பன்சாலியின் படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அவர் கதாநாயகிகளை காட்சிப்படுத்தும் விதம் மிகவும் அருமையாக இருக்கும். எதிர்காலத்தில் கதாநாயகியாக நடிப்பேன் என்று நம்புகிறேன்," என்றார்