டாகு மகாராஜுக்கு பிறகு...பாலையாவின் அடுத்த படம் குறித்து வெளியாகும் தகவல்கள்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா(பாலையா);
சென்னை,
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா(பாலையா). இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டாகு மகாராஜ். பாபி கொல்லி இயக்கி இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
இதனையடுத்து, பாலையாவின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் இருக்கும்நிலையில், 'வீர சிம்ஹா ரெட்டியை இயக்கிய கோபிசந்த் மலினேனியுடன் மீண்டும் பாலையா பணியாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், மற்றொரு தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, ரவி தேஜா நடித்திருந்த 'மிஸ்டர் பச்சான்' பட இயக்குனர் ஹரிஷ் சங்கர் பாலையாவின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலையா தற்போது அகண்டா 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.