புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய பாசில் ஜோசப்!

இயக்குநரும் நடிகருமான பாசில் ஜோசப் தற்போது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.;

Update:2025-09-15 16:21 IST

கொச்சி,

மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் 'கோதா', 'மின்னள் முரளி' படங்களின் மூலம் பிரபல இயக்குநராக அறியப்படுகிறார். இயக்குநராக மட்டுமில்லாமல் தற்போது முன்னணி நடிகராகவும் வலம்வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சூக்ஷமதர்ஷினி, பொன்மேன், மரணமாஸ்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான பாசில் ஜோசப் தற்போது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். பாசில் ஜோசப் எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்