“பிக் பாஸ்” விக்ரமன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

பிரீத்தி கரிகாலன் இயக்கியுள்ள திரைப்படத்தின் டைட்டில் விரைவில் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.;

Update:2026-01-04 17:40 IST

‘பிக் பாஸ்’ மூலம் பிரபலமான விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை பிரீத்தி கரிகாலன் இயக்கியுள்ளார். இதில், நாயகியாக சுப்ரிதாவும் முக்கிய வேடத்தில் ஜென்சன் திவாகரும் நடிக்கின்றனர்.

ரொமான்டிக் கதையைக் கொண்ட இந்தப் படத்தை கோல்டன் கேட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு அஜீஷ் அசோகன் இசை அமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இதுபற்றி தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் கூறும்போது, “குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை வெளியிடுவதற்கான சரியான தருணத்தைத் திட்டமிட்டு வருகிறோம். இது ரசிகர்களுக்கு ஜாலியான அனுபவத்தைக் கொடுக்கும். படத்தின் டைட்டில் , டீசர், டிரெய்லர் வெளியீடு குறித்து விரைவில் அறிவிப்போம்” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்