ரன்வீர் சிங்கின் 'டான் 3'...வெளியான முக்கிய அப்டேட்
இப்படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.;
சென்னை,
ரன்வீர் சிங்கின் டான் 3 பட அப்டேட்டுக்காக நாடு முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடுப்பகுதியில் இருந்து தொடங்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
டான் 3 படத்தில் வில்லன் வேடத்திற்கு விஜய் தேவரகொண்டா மற்றும் விக்ராந்த் மாஸ்ஸி போன்ற பிரபல நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், வில்லனாக நடிக்கும் நடிகரை தயாரிப்பாளர்கள் இன்னும் இறுதி செய்யவில்லை. ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வதந்தி பரவியுள்ளது.
பாலிவுட் இயக்குநர் சந்திரா பரோட் இயக்கத்தில் 1978-ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் 'டான்' திரைப்படம் ரிலீசானது. இந்தப் படம் ரஜினியை வைத்து 'பில்லா' என்று தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதன் பின்னர் இந்தியில் ஷாருக்கானை வைத்து 2006-ல் 'டான்' படத்தின் முதல் பாகத்தையும், 2011- ல் இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் பர்ஹான் அக்தர் இயக்கி இருந்தார். தற்போது பல வருடங்களுக்குப் பின் 'டான்' படத்தின் 3ம் பாகம் உருவாக உள்ளது.