பாலிவுட் நடிகைக்கு டோலிவுட்டில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்
சயாமி கெர் கடைசியாக சன்னி தியோலின் 'ஜாத்' படத்தில் நடித்திருந்தார்.;
சென்னை,
இளம் பாலிவுட் நடிகையான சயாமி கெர், சமீபத்திய நேர்காணலில் டோலிவுட்டில் தனக்கு நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை வெளிப்படுத்தினார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சயாமி கெர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு சாய் துர்கா தேஜ் நடிப்பில் வெளியான 'ரே' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு பாலிவுட் பக்கம் திரும்பினார்.
இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் டோலிவுட்டில் தனக்கு நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில்,
'ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அப்போது எனக்கு 19-20 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வாய்ப்பு கிடைக்க என்னிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொன்னார்கள். அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால்தான் நடிக்க முடியும் என்றால் அது தேவையில்லை என்று அதை நிராகரித்து விட்டேன்' என்றார்.
சயாமி கெர் கடைசியாக சன்னி தியோலின் 'ஜாத்' படத்தில் எஸ்ஐ விஜய லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.