'பிரம்மாஸ்திரா 2' படம் நிச்சயம் வரும் - ரன்பீர் கபூர்

நடிகர் ரன்பீர் கபூர் 'பிரம்மாஸ்திரா 2' படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.;

Update:2025-03-15 16:23 IST

மும்பை,

கடந்த 2022-ம் ஆண்டு பாலிவுட்டில் மிகவும் பிரமாண்டமான முறையில் 3-டி வடிவில் வெளியான படம், 'பிரம்மாஸ்திரா'. அயன்முகர்ஜி இயக்கிய இப்படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, ஷாரூக்கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் இந்துமதப் பின்னணியில் கற்பனை கலந்து உருவாக்கப்பட்டது. இந்தப் படத்திற்கு பலதரப்பில் இருந்தும் வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று கூறப்பட்டது.

ஆனால் 'பிரம்மாஸ்திரா' 2-ம் பாகம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. இதற்கிடையில் நடிகர் ரன்பீர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, 'பிரம்மாஸ்திரா 2' படம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரன்பீர் கபூர், "பிரம்மாஸ்திரா என்பது இயக்குனர் அயன் முகர்ஜியின் நீண்ட கால கனவு என்பது உங்களுக்கு தெரியும். தற்போது அவர் 'வார் 2' படத்தில் பணியாற்றி வருகிறார். அது வெளியானவுடன், 'பிரம்மாஸ்திரா 2'படத்தினை துவங்குவார். நாங்கள் இதுவரை அப்படம் குறித்து அதிகமாக பேசவில்லை. ஆனால் 'பிரம்மாஸ்திரா 2' நிச்சயமாக வரும். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்