3 பிஎச்கே நடிகையின் அடுத்த படம்

நடிகை சைத்ராவின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.;

Update:2025-09-21 09:38 IST

சென்னை,

3 பிஎச்கே படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை சைத்ரா, தற்போது பல்வேறு இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.இவர் நடித்துள்ள ''மார்ணமி'' ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.

இதற்கிடையில் , நடிகை சைத்ராவின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படம் சைத்ராவை மையமாக கொண்டு உருவாக உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை, சக்தி பிரசாத் இயக்க உள்ளதாக தெரிகிறது.

இப்படத்திற்கான டீஸர் படப்பிடிப்பு ஏற்கனவே முடித்துவிட்டதாகவும், அதிகாரபூர்வ அறிவிப்பு தசரா அல்லது தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்