கீதா கைலாசத்தின் ’அங்கம்மாள் ’ - ’ செண்டிப்பூவா’ பாடல் வெளியீடு
அங்கம்மாள் திரைப்படம் வருகிற 5-ம் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
ஸ்டோர் பெஞ்ச் நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் பிரோ மூவி ஸ்டேஷன் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள படம் ‘அங்கம்மாள்’. இப்படம் புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கியுள்ளது.
இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். மேலும் சரண், பரணி, முல்லையரசி மற்றும் தென்றல் ரகுநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 5ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்திலிருந்து,’ செண்டிப்பூவா’பாடல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ‘அங்கம்மாள்’ வென்றது குறிப்பிடத்தக்கது.