கார்த்தியின் ’வா வாத்தியார்’ - ’முதலாளி’ பாடல் வெளியீடு

இப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாகிறது.;

Update:2025-12-02 19:39 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்திலிருந்து, ’முதலாளி’ என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை சுப்லட்சுமி பாடியுள்ளார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்