'இந்த படத்தின் 2-ம் பாகம் உருவானால் அவர்கள்தான் நடிக்க வேண்டும்' - சிரஞ்சீவி

சிரஞ்சீவி மற்றும் ஸ்ரீதேவி நடித்திருந்த 'ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி' படம் இன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி இருக்கிறது.;

Update:2025-05-09 15:09 IST

சென்னை,

சிரஞ்சீவி மற்றும் ஸ்ரீதேவி நடித்திருந்த 'ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி' (காதல் தேவதை)படம் வெளியாகி 35 ஆண்டுகளை கடந்துள்ளநிலையில் அப்படம் இன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி இருக்கிறது.

இது பற்றி சிரஞ்சீவி கூறுகையில், "இந்த சந்தர்ப்பத்தில் நான் ஸ்ரீதேவியை மிகவும் மிஸ் செய்கிறேன். அவர் இப்படத்தின் இதயம். ஆரம்பத்தில், நான் இப்படத்தின் 2-ம் பாகம் உருவாவதை விரும்பவில்லை. ஆனால் தற்போது அதை நாக் அஸ்வின் இயக்க ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் பார்க்க விரும்புகிறேன்' என்றார்.

சிரஞ்சீவி தற்போது 'விஸ்வம்பரா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், அனில் ரவிபிடி இயக்கத்தில் தனது 157-வது படத்திலும் நடிக்க இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்