8 வருடங்களுக்கு பிறகு அந்த ஹீரோவுடன் இணைந்த ரச்சிதா ராம்...டைட்டில் அறிவிப்பு
இந்த படத்திற்கு ’கிரிமினல்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.;
சென்னை,
துருவா சர்ஜாவின் ‘கேடி’ படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கும்நிலையில், அவர் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ராஜ்குரு பி இயக்குகிறார்.
இப்படத்தில் கதாநாயகியாக ரச்சிதா ராம் நடிக்கிறார். பர்ஜாரி (2017) படத்திற்குப் பிறகு சிமார் 8 வருடங்களுக்கு பிறகு துருவா சர்ஜா, ரச்சிதா ராம் இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ’கிரிமினல்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.