மீண்டும் அந்த ஹீரோ, இயக்குனருடன் இணையும் சாய் பல்லவி?
இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.;
சென்னை,
சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'அமரன்' படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக சாய் பல்லவியின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது பாலிவுட்டில் உருவாகும் மிகப்பெரிய பான்-இந்தியா படமான 'ராமாயணம்' படத்தில் சீதை வேடத்தில் அவர் நடித்து வருகிறார்.
தனுஷ் தற்போது 'அமரன்' இயக்குனரின் புதிய படத்தில் ஹீரோவா நடித்து வருகிறார். இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. இதில் கதாநாயகியாக மீனாட்சி சவதரி மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
ஆனால் இப்போது சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாய் பல்லவி இந்தப் படத்தில் நடிப்பாரா இல்லையா என்பது குறித்து விரைவில் தெரிய வரும். சாய் பல்லவி முன்பு தனுஷுடன் 'மாரி 2' படத்தில் நடித்திருந்தார்.