விமர்சனங்கள் என்னை பாதிக்காது - நடிகை நிவேதா தாமஸ்
உருவக்கேலிகளும், எதிர்மறை விமர்சனங்களும் என்னை பாதிக்காது என்று நிவேதா தாமஸ் கூறியுள்ளார்.;
'தர்பார்' படத்தில் ரஜினிகாந்தின் மகளாகவும், 'பாபநாசம்' படத்தில் கமல்ஹாசன் மகளாகவும், 'ஜில்லா' படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்த நிவேதா தாமஸ், மலையாளத்தில் கதாநாயகியாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் சில உடல்நல பிரச்சினைகளால் எடை கூடிப்போன நிவேதா தாமஸ், தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போயிருக்கிறார். உருவக்கேலிகளுக்கும் ஆளாகி வருகிறார்.
ஆனாலும், இதுபோன்ற உருவக்கேலிகளும், எதிர்மறை விமர்சனங்களும் என்னை நிச்சயம் பாதிக்காது, என்று சொல்லும் நிவேதா தாமஸ், தொடர்ந்து தனது பணிகளில் முனைப்பாக ஈடுபட்டிருக்கிறார். புதிய கதைகளும் கேட்டு வருகிறார்.
கடந்த ஆண்டு அவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான '35' என்ற படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த படத்தில் சிறந்த நடிப்புக்காக நிவேதா தாமஸ் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.