தனுஷ் ரசிகர்களுக்கு ‘டி54’ படக்குழு வேண்டுகோள்
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார்.;
சென்னை,
போர் தொழில் பட இயக்குனர் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54வது படத்தில் நடித்துத்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘டி54’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார்.
சமீபத்தில் இப்படத்திலிருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன. இந்த நிலையில், ‘டி54’படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு தனுஷ் ரசிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியான பதிவில், "எங்கள் அன்பான" ரசிகர்களே ‘டி54’படப்பிடிப்புத் தளத்திலிருந்து எந்தக் காட்சிகளையும் பகிராமல் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் ஒத்துழைப்பு தேவை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பதாகையின் கீழ் ஐசரி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.