’பிகில்’ பட நடிகையின் ’கிரைம் திரில்லர்’...ரிலீஸ் தேதி அறிவிப்பு
ரெபா மோனிகா ஜான் , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்திருந்தார்.;
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ரெபா மோனிகா ஜான். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். 2016-ம் ஆண்டு "ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம்" என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர்.
தமிழில் 2018-ம் ஆண்டு ஜெய் நடித்த "ஜருகண்டி" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர். பின்னர், விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் ரஜினியின் கூலி படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவர் மலையாளத்தில் தீரம் என்ற கிரைம் திரில்லர் படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஜித்தின் டி சுரேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், இந்திரஜித் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில், தீரம் டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.