“பராசக்தி” படத்தை பார்த்து சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி

சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ திரைப்படம் 2 நாட்களில் ரூ. 51 கோடி வசூல் செய்துள்ளது.;

Update:2026-01-13 14:27 IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ‘பராசக்தி’ . சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உடன் அதர்வா, ஸ்ரீலீலா போன்ற நடிகர்கள் நடித்திருக்கும் நிலையில், படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவருடைய இசையில் 100வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது.

1959ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய மாணவர்கள் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்திருக்கும் பராசக்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், மொழி உணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்ற முன்னெடுப்பிற்காக பாராட்டப்பட்டு வருகிறது.

‘பராசக்தி’ திரைப்படம் 2 நாட்களில் ரூ. 51 கோடி வசூல் செய்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று ‘பராசக்தி’ படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் “நடிப்பதற்கு சவாலான கதாப்பாத்திரம் என்பதால் பராசக்தியைதேர்வு செய்தேன். ‘பராசக்தி’ படத்தில் நடித்தது எனது வாழ்நாள் பெருமை. சினிமாவிற்கு ஏற்பட்ட சில மாற்றங்கள் செய்தே படம் எடுக்கப்பட்டது” என்றார்.

இந்நிலையில், ‘பராசக்தி’ படத்தை பார்த்துவிட்டு போன் செய்து ரஜினிக்கு சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். எனது தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று காலை போன் செய்து, இது மிகவும் துணிச்சலான படம் என்றும், இரண்டாம் பாதி சூப்பர் என்று பாராட்டியதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். மேலும் கமல்ஹாசன் சார் அமரன் படத்திற்காக அவர் என்னுடன் 2 நிமிடங்கள் பாராட்டி பேசினார், ஆனால் ‘பராசக்தி’ படத்தில் என் நடிப்பை பாராட்டி 5 நிமிடங்கள் பேசியதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்