ஹீரோவான இயக்குனர் ராம் கோபால் வர்மா?

இந்த படத்தில் மூத்த நடிகர் சுமன் வில்லனாக நடிப்பதாக தெரிகிறது.;

Update:2025-12-06 17:02 IST

சென்னை,

இயக்குனர் ராம் கோபால் வர்மா, தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு "ஷோமேன்" எனப்பெயரிடப்பட்டுள்ளதாகவும் , அதில் மூத்த நடிகர் சுமன் வில்லனாக நடிப்பதாக தெரிகிறது. ரஜினிகாந்தின் 'சிவாஜி' படத்தில் சுமன் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

'நுதன்' என்பவர் இந்த படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக தெரிகிறது. ஆர்.ஜி.வி உடன் இணைந்து 'ஐஸ்கிரீம்-1, ஐஸ்கிரீம்-2' போன்ற படங்களை தயாரித்த தும்மலப்பள்ளி ராமசத்யநாராயணா இந்த படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது.

வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு படத்தின் டிரெய்லரை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில், இது முற்றிலும் பொய் என்றும் ஏஐ-யால் உருவாக்கப்பட்டது என்றும் ராம் கோபால் வர்மா தெரிவித்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்