டைட்டிலுக்கு ஏற்றபடி ’ஒன் மேன்’ ஆக திரைப்படத்தை எடுத்து முடித்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்
சங்ககிரி ராஜ்குமார் இயக்கிய "ஒன் மேன்" படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ளது.;
'வெங்காயம்', 'பையாஸ்கோப்' போன்ற படங்களை எடுத்து கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். இவர் தற்போது "ஒன் மேன்" என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்த படத்தினை திரைக்கதை, வசனம், மேக்கப், காஸ்டியூம், கிரேன் ட்ராலி மூவ்மெண்ட், ஒளிப்பதிவு, லைட்டிங், எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் யாருடைய உதவியும் இன்றி தனி ஒருவனாக எடுத்து முடித்திருக்கிறார்.
சங்ககிரி ராஜ்குமார் ஒரு திரைப்படத்திற்கு தேவையான அனைத்து வேலைகளையும் தனி ஒரு மனிதனாக செய்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ளது. இந்த முன்னோட்ட வீடியோ மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.