நான் திரைத்துறைக்குள் நுழைய முக்கிய காரணம் அவர்தான்!- "டாடா" பட இயக்குநர்
இயக்குநர் கணேஷ் கே பாபு தற்போது 'கராத்தே பாபு' என்ற படத்தை இயக்கி வருகிறார்.;
சென்னை,
கடந்த 2023ம் ஆண்டு வெளியான 'டாடா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கணேஷ் கே பாபு. கவின், அபர்ணா தாஸ் நடித்திருந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் கணேஷ் கே பாபு ரவி மோகனை வைத்து 'கராத்தே பாபு' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், கணேஷ் கே பாபு இயக்குநரும், நடிகருமான செல்வராகவனை நேரில் சந்தித்துள்ளார். அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், சினிமாவின் மீதான எனது கண்ணோட்டத்தை 'புதுப்பேட்டை' திரைப்படம் மாற்றியது. அது 'டாடா, கராத்தே பாபு' ஆகிய படங்களை இயக்குவதற்கு எனக்கு உதவியது. நான் திரைத்துறைக்குள் நுழைய முக்கிய காரணங்களுள் செல்வராகவனும் ஒருவர். அவரை சந்தித்ததால் வாழ்க்கை நிறைவடைந்தது போல் உணர்கிறேன்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.