’தெலுங்கு சினிமா அவரின் திறமையை பயன்படுத்தத் தவறிவிட்டது’ - சிவாஜி
இதில் பிந்து மாதவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.;
சென்னை,
பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி, நடிகர் நவ்தீப்பின் திறமையை தெலுங்கு திரைப்படத்துறை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்று கூறி அவரை பாராட்டியுள்ளார்.
விரைவில் இருவரும் இணைந்து நடித்திருக்கும் 'தண்டோரா' திரைப்படம் ரிலீஸாக உள்ளநிலையில், படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
தண்டோரா படம் நவ்தீப்பின் திறனை அனைவருக்கும் காட்டும் என்றும், அவருக்கு தகுதியான அங்கீகாரத்தை வழங்கும் என்றும் சிவாஜி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த படம் குறித்து பலத்த எதிர்பார்ப்பு நிலவி வரும்நிலையில், இந்தப் படம் டிசம்பர் 25 அன்று வெளியாகிறது. இதில் பிந்து மாதவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.