விஜே சித்து இயக்கும் “டயங்கரம்” படப்பிடிப்பு தொடக்கம்

விஜே சித்து இயக்கும் ‘டயங்கரம்’ படத்தினை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.;

Update:2025-10-27 16:13 IST

சென்னை,

தமிழ் யூடியூபர்களில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர்களில் ஒருவர் வி.ஜே.சித்து. நிகழ்ச்சித் தொகுப்பாளர் , பிராங் ஷோ என கரியரைத் தொடங்கிய விஜே சித்து தற்போது ‘சித்து விளாக்ஸ்’ என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான 'டிராகன்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. 

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வி.ஜே.சித்து இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்ப்பில் ‘டயங்கரம்’ படத்தை தயாரிப்பாளர் ஐசாரி கணேஷன் தயாரிக்கிறார். இந்த படத்தினை எழுதி, இயக்கி, ஹீரோவாகவும் நடிக்கவுள்ளார் விஜே சித்து. ‘டயங்கரம்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர், புரோமோ வீடியோ வெளியாகி வைரலானது. 

இந்த நிலையில், ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்