முன்பதிவில் “ஓஜி” படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

பவன் கல்யாணின் ‘ஓஜி’ திரைப்படம் உலகளவில் முன்பதிவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2025-09-25 15:19 IST

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இவர் தற்போது, இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் ‘ஓஜி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.வி.வி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் டி.வி.வி தனய்யா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 

பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் இன்று வெளியானது. ‘ஓஜி’ திரைப்படம் இதுவரை உலகளவில் முன்பதிவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்