விஜய்யை பற்றி சமந்தா சொன்ன விஷயம்.. என்ன தெரியுமா?
'கத்தி' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்ததே நடிகை சமந்தாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது.;
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த 'விண்ணைதாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து 'பானா காத்தாடி, நீதானே பொன் வசந்தம், அஞ்சான்' என பல படங்களில் நடித்து பிரபலமானார்.
அதனை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார் சமந்தா. ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கிடைக்காமலே இருந்தது. அந்த சமயத்தில் 2014-ம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து, விஜய்யுடன் இணைந்து 'தெறி, மெர்சல்' என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் நடிகை சமந்தா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, சமந்தா சொன்ன விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சமந்தாவிடம் கோலிவுட்டில் உங்களுடைய 'லக்கி சாம்' யாரென்று கேட்கப்பட்டது. அதற்கு நடிகை சமந்தா விஜய் சார் தான் என்று யோசிக்காமல் கூறியுள்ளார்.