'டியூட்' படத்தில் நடித்த இந்த ஹீரோயின்...யார் தெரியுமா?

இப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்த இந்த நடிகை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார்.;

Update:2025-10-19 18:04 IST

சென்னை,

லவ் டுடே மற்றும் டிராகன் போன்ற தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் படங்களுக்குப் பிறகு, பிரதீப் ரங்கநாதன் டியூட் படத்தில் நடித்திருக்கிறார். கீர்த்தீஸ்வரன் இயக்கி உள்ள இந்த படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜு கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வசூலை ஈட்டியுள்ளது. இந்தப் படத்தில் மமிதா பைஜு உடன் நேஹா ஷெட்டியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையில், இப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்த ஒரு நடிகை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார். அவர்தான் ஐஸ்வர்யா சர்மா. அவர் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், படத்தில் பல காட்சிகளில் அவர் காணப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஐஸ்வர்யா சர்மா, தெலுங்கில் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்