''என்னை அப்படி கூப்பிடாதீர்கள்'' - ''அனுமான்'' பட நடிகர்
''மிராய்''படத்தில் வில்லனாக மஞ்சு மனோஜ் நடித்திருக்கிறார்.;
சென்னை,
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா படங்களில் ஒன்று ''மிராய்''. கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில் ''அனுமான்'' பட நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் இந்த படம் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
அந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் தேஜா, ஊடகங்கள் மற்றும் ரசிகர்களிடம் தன்னை ஒரு பான்-இந்தியா நடிகர் என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
தெலுங்கு படங்களைப் பார்த்து வளர்ந்ததாகவும், தெலுங்கு மொழி படங்களில் மட்டுமே நடித்துள்ளதாகவும், தொடர்ந்து அதையே செய்வேன் என்றும் கூறினார். இதனால் தன்னை அப்படி அழைப்பதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
''மிராய்''படத்தில் வில்லனாக மஞ்சு மனோஜ் நடித்திருக்கிறார். மேலும் ஷ்ரேயா சரண், ஜகபதி பாபு, ஜெயராம் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் செப்டம்பர் 12 அன்று பல மொழிகளில் வெளியாக உள்ளது.