பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் - குடும்பத்தினர் வேண்டுகோள்

பாரதிராஜாவின் உடல்நிலை பற்றி வெளியாகும் தகவல்களை அவரது உறவினர்களும், நண்பர்களும் மறுத்துள்ளனர்.;

Update:2026-01-04 23:54 IST

கோப்புப்படம்

சென்னை,

'சிவப்பு ரோஜாக்கள்', 'கிழக்கு சீமையிலே', 'முதல் மரியாதை', 'வேதம் புதிது' என தனது படைப்புகளால் இந்திய சினிமாவையே கவனிக்க வைத்த இயக்குனர் பாரதிராஜா, தனது மகன் மனோஜ் மறைவுக்கு பிறகு (கடந்த மார்ச் மாதம்) மனமுடைந்து போனார்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட வந்த பாரதிராஜாவுக்கு வீசிங் போன்ற சுவாச பிரச்சினைகளும் ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் பாரதிராஜாவின் உடல்நிலை பற்றி வெளியாகும் தகவல்களை அவரது உறவினர்களும், நண்பர்களும் மறுத்துள்ளனர். 'அவர் நலமாக இருக்கிறார். சிகிச்சைகள் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. விரைவில் அவர் வீடு திரும்புவார். வதந்திகளை பரப்பவோ, அதை நம்பவோ வேண்டாம்', என்றனர்.

அதேவேளை மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட மருத்துவக்குறிப்பில், 'மூச்சுத்திணறலால் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜாவுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவ குழுவினரால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்', என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்