"ஜன நாயகன்": விஜய் முதல் பூஜா ஹெக்டே வரை.. யாருக்கு எவ்வளவு சம்பளம்?
'ஜனநாயகன்' படம் ரூ.380 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
இயக்குநர் எச்.வினோத் விஜய்யை வைத்து ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்து பொங்கல் வெளியீடாக வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். மேலும் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தீவிர அரசியலில் களமிறங்கி இருக்கும் விஜய் நடிக்கும் கடைசி படம் இதுதான் என்று கூறப்படுகிறது. இதனால் படத்துக்கு சினிமா தாண்டி அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் டிரெய்லர் கடந்த 3ந் தேதி வெளியானது இந்த டிரெய்லர் அதிக பார்வைகளை பெற்று தற்போது யூடியூப் தளத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், ஜன நாயகன் படத்தில் யார் எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ரூ.380 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த படத்தில், நடிகர் விஜய் ரூ.220 கோடி சம்பளமும், இயக்குநர் எச்.வினோத்துக்கு ரூ.25 கோடியும், இசையமைப்பாளர் அனிருத்துக்கு ரூ.13 கோடியும், பாபி தியோல் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோருக்கு தலா ரூ.3 கோடியும், நடிகை மமிதா பைஜூவிற்கு ரூ.60 லட்சம் சம்பளமும் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.