நடிகர் யாஷின் தாயார் ஆக்கிரமித்து கட்டிய சுவர் இடிப்பு
கோர்ட்டு உத்தரவின் பேரில் சுவர் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரபல நடிகர் யாஷின் தாய், ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் இடத்தில் கட்டப்பட்ட சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டுள்ளது.
வீட்டை ஒட்டிய 1,500 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்து, அவர் சுற்றுச் சுவர் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோர்ட்டு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், கோர்ட்டு உத்தரவின் பேரில் சுவர் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
நடிகர் யாஷ் தற்போது டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார். கீத்து மோகன்தாஸ் இயக்கும் இப்படத்தில், கியாரா அத்வானி, நயந்தாரா, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் 19-ம் தேதி திரைக்கு வருகிறது.