அந்த இரண்டு படங்களை விட 'டியூட்' அதிக வசூல் செய்துள்ளது - பிரதீப் ரங்கநாதன்

‘டியூட்’ படம் வெளியான 6 நாட்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.;

Update:2025-10-24 07:42 IST

பெங்களூரு,

சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த 17ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் ‘டியூட்’. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இதில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.

காதல், காமெடி கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் பரிதாபங்கள் ராகுல், நேகா ஷெட்டி, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸ்  ஹிட் கொடுத்துள்ளது.

இந்நிலையில், முன்னதாக நடந்த படவிழா ஒன்றில் தனது முந்தைய 2 படங்களை விட ‘டியூட்’ தெலுங்கில் அதிக வசூல் செய்துள்ளதாக பிரதீப் கூறினார். அவர் கூறுகையில்,

"'டியூட்' படத்தை இவ்வளவு சிறப்பாக வரவேற்ற தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள் காட்டிய அன்பு மறக்க முடியாதது. நான் ஹீரோவாக நடித்த 'லவ் டுடே, ரிட்டர்ன் ஆப் தி டிராகன்' படங்களை தெலுங்கு ரசிகர்கள் மிகவும் விரும்பினர். இப்போது, அந்த இரண்டு படங்களை விட 'டியூட்' படத்தின் மீது அதிக அன்பையும் பாசத்தையும் காட்டுகிறீர்கள்.

'டியூட்' படத்தின் வசூல் எனது முந்தைய படத்தை விட  அதிகம் என்று எங்கள் தயாரிப்பாளர்கள் கூறும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார். ‘டியூட்’ படம் வெளியான 6 நாட்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்