டிரோலில் சிக்கிய இசையமைப்பாளர் தமன்

பிரபாஸின் "தி ராஜா சாப்" படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.;

Update:2025-12-15 00:12 IST

சென்னை,

"தி ராஜா சாப்" படத்தின் இரண்டாவது பாடல் குறித்து இசையமைப்பாளர் தமன் போட்ட பதிவு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

பான் இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் அடுத்து திரைக்கு வர இருக்கும் படம் தி ராஜா சாப். மாருதி இயக்கிய இந்த திகில் நகைச்சுவை படம் ஜனவரி 10-ம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானநிலையில், வருகிற 17-ம் தேதி மாலை 6.35 மணிக்கு 2-வது பாடல் வெளியாகிறது.

பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும், சஞ்சய் தத் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

இதற்கிடையில், "தி ராஜா சாப்" படத்தின் 2வது பாடல் விரைவில் வெளியாகும் என்று தமன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அந்த பதிவில், பாடலை நான் கேட்டென், இது காலாகாலத்துக்கும் நிக்கும் என்று சொல்லியிருந்தார். அப்ப, பாடல கம்போஸ் பண்ணது நீங்க இல்லையான்னு ஏகப்பட்ட கேள்வி கேட்டு, நெட்டிசன்கள் டிரோல் செய்ய ஆரம்பித்தது இப்போது பேசுபொருளாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்