’ராமாயணத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்’ - பிரபல நடிகை
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ராமாயணம்.;
மும்பை,
ராமாயணம் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக நடிகை ரியா கபூர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் இதை கூறினார். ஆனால், காதாபாத்திரத்தை அவர் வெளிப்படுத்தவில்லை.
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், கன்னட நடிகர் யாஷ் மற்றும் நட்சத்திர நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ராமாயணம். இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தில் ரன்பீர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர்.
நிதேஷ் திவாரி இயக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. இதில் முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் கிளிப்ஸ் வீடியோ வெளியாகி வைரலானது.