'தக் லைப்' - துல்கர் சல்மான் ரசிகர்கள் மகிழ்ச்சி - ஏன் தெரியுமா?

''தக் லைப்'' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.;

Update:2025-06-07 02:38 IST

சென்னை,

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ''தக் லைப்'' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை ஈர்க்கவில்லை.

''தக் லைப்'' படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும்நிலையில், துல்கர் சல்மானின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கு காரணம் என்னவென்று பார்க்கும்போது, ''தக் லைப்'' படத்தில் சிம்புவுக்கு முன்பு அமர் வேடத்தில் துல்கர்தான் நடிக்க இருந்திருக்கிறார். பின்னர் கால்ஷீட் காரணமாக அவர் விலகி இருக்கிறார்.

அவர் விலகியபோது, ஒரு பொன்னான வாய்ப்பை அவர் விட்டுவிட்டதாக சமூக ஊடகங்களில் பலர் தெரிவித்திருந்தநிலையில், தற்போது துல்கரின் அந்த முடிவு சரியானது என்று அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்