’காந்தா படத்தில் துல்கரின் நடிப்பு உங்களை ஆச்சரியப்படுத்தும்’ - சமுத்திரக்கனி

'காந்தா' படத்தில் துல்கர் சல்மானின் நடிப்பை சமுத்திரக்கனி பாராட்டினார்.;

Update:2025-11-09 15:44 IST

சென்னை,

நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி, 'காந்தா' படத்தில் துல்கர் சல்மானின் நடிப்பை பாராட்டினார்.

இந்தப் படத்தைப் பற்றிப் பேசிய சமுத்திரக்கனி, துல்கரின் கதாபாத்திரம் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக கூறினார். "படத்தைப் பார்த்த பிறகு,துல்கரிடம் ஓடிச் சென்று அவரைக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்பதுபோல இருந்தது," என்று கேரளாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்து கொண்டார்.

மேலும் காந்தா படத்தில் துல்கர் தனது அற்புதமான நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார் என்றும் கூறினார். செல்வமணி செல்வராஜ் இயக்கிய இந்தப் படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 14-ம் தேதி திரைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்