’படக்கலம்’ நடிகரின் புதிய படம் ’எக்கோ’...டிரெய்லர் வெளியானது
’எக்கோ’ திரைப்படம் வருகிற 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.;
சென்னை,
கிஷ்கிந்தா காண்டம் படத்தின் இயக்குனர் தின்ஜித் அய்யாதனும் , படக்கலம் பட நடிகர் சந்தீப் பிரதீப்பும் புதிய படத்திற்காக கைகோர்த்திருக்கின்றனர். இப்படத்திற்கு எக்கோ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இன்று ’எக்கோ’ படத்தின் தயாரிப்பாளர்கள் சுமார் இரண்டு நிமிட நீள டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் அசோகன், பியானா மோமின், என்.ஜி. ஹங் ஷென், சிம் ஸி பீ, சாஹிர் முகமது மற்றும் ரஞ்சித் சேகர் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
’எக்கோ’ திரைப்படம் வருகிற 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதே நாளில் பிருத்விராஜின் ' 'விலாயத் புத்தா' திரைப்படமும் வெளியாகிறது.