இறுதிக் கட்டத்தை எட்டிய "நூறு சாமி" படப்பிடிப்பு
இப்படம் அடுத்த ஆண்டு மே 1ம் தேதியன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.;
சென்னை,
விஜய் ஆண்டனியின் நூரு சாமி திரைப்படம் இறுதிக் கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இது குறித்த புகைப்படத்தை விஜய் ஆண்டனி பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியை ஹீரோவாக பிரபலமாக்கியது இப்படம். இப்போது ‛நூறு சாமி’ என்ற படத்தின் மூலம் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இப்படத்தில், விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படம் இறுதிக் கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளதை விஜய் ஆண்டனி அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரவாகி வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு மே 1ம் தேதியன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.