4 வாரங்களை கடந்து வெற்றி நடை போடும் "எப்1 " திரைப்படம்

பிராட் பிட் நடித்த "எப்1 " திரைப்படம் உலகளவில் 3626 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது;

Update:2025-07-20 20:38 IST

டாப் கன் மேவ்ரிக் படத்தை இயக்கிய ஜோசப் கொசின்ஸ்கி அடுத்ததாக பிராட் பிட் நடிப்பில் 'எப்1' படத்தை இயக்கினார்.இப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ 76.5 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. உலகளவில் ரூ 3626 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்தாண்டு வெளியாகி அதிக வசூல் பெற்ற திரைப்படங்களில் 'எப்1' முக்கிய இடத்தில் உள்ளது.


காசுக்காக பல ரேஸ்களில் ஈடுப்பட்டு வரும் ப்ராட் பிட் தன் நண்பனின் டிம்ம் 'எப்1' ரேஸில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அங்கு ரேஸ் ஓட்ட வருகிறார். அங்கு ஏற்கனவே இளம் ரேஸரான ஜோஷ்வா இருக்கிறார். அவர்களுக்கு இடையே முரண் ஏற்படுகிறது. இதைத்தாண்டி எப்படி அவர்கள் ரேசில் வென்றார்கள் என்பதே படத்தின் கதையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்