மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரபல தமிழ் நடிகை

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்றது.;

Update:2025-02-28 09:12 IST

லக்னோ,

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராய் லட்சுமி. இவர் தமிழில் நான் அவன் இல்லை, காஞ்சனா, மங்காத்தா போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியானது.

இந்நிலையில், நடிகை ராய் லட்சுமி மகா கும்பமேளாவில் புனித நீராடி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்திருக்கிறார்.

மகா கும்பமேளாவில் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டநிலையில், அந்த வரிசையில் தற்போது ராய் லட்சுமியும் இணைந்துள்ளார். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்றது. கடந்த மாதம் 13-ம் தேதி பவுர்ணமி தினத்தன்று தொடங்கிய பிரயாக்ராஜ் கும்பமேளா, சிவராத்திரியான நேற்று முன்தினம் இரவுடன் முடிவடைந்தது. இந்த 45 நாட்களில் 66 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடினர்.

Tags:    

மேலும் செய்திகள்