’தாயாக ஆசை இல்லை...அது ஒரு பெரிய பொறுப்பு’ - பிரபல நடிகை

மக்கள் அதை சுயநலம் என்று கூறினாலும் தனக்கு கவலையில்லை என்று அவர் கூறினார்.;

Update:2025-11-21 11:48 IST

சென்னை,

சிலர் திருமணத்திற்குப் பிறகு உடனடியாக குழந்தைகளைப் பெற விரும்புவதில்லை, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு குழந்தைகளைப் பெறத் திட்டமிடுகிறார்கள். அதேவேளை, குழந்தைகளை விரும்பாதவர்களும் சிலர் இருக்கிறார்கள். இந்த நடிகையும் அப்படிபட்டவர்தான்.

அவர் வேறுயாரும் இல்லை. நடிகை அகன்ஷாதான். தனக்கு தாயாக ஆசை இல்லை என்று அகன்ஷா கூறினார். அவர் பேசுகையில்,

’குழந்தைகளை விரும்பாததற்கு எனக்கு பல காரணங்கள் உள்ளன. அதனால்தான் அதற்கு திட்டமிடவில்லை. குழந்தையைப் பெற்றெடுப்பது உணவை சமைப்பதுபோல எளிதானது அல்ல. அது ஒரு பெரிய பொறுப்பு. அதை என்னால் செய்ய முடியாது என்று நினைக்கிறேன்.

Advertising
Advertising

இப்போது இல்லை, எதிர்காலத்திலும் அந்தப் பொறுப்பை என்னால் நிறைவேற்ற முடியுமா என்று தெரியவில்லை. இப்போது என் தொழில் எனக்கு முக்கியமானது. எனக்கு பல இலக்குகள் உள்ளன. மக்கள் அதை சுயநலம் என்று கூறினாலும் எனக்கு கவலையில்லை.” என்றார். அகன்ஷா கடந்த 2016-ல் நடிகர் கௌரவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்