ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிப்பா?.. கீர்த்தி சுரேஷின் கருத்தை எதிர்த்த விஜய் ஆண்டனி!
ஏஐ தொழில்நுட்பம் வளர வளர பாதிப்பு அதிகரித்து வரும் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
நடிகை கீர்த்தி சுரேஷ் சந்துரு இயக்கத்தில் ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கின்றன. இப்படம் வருகிற 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது.
‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்றார். பின்னர் அவர், ‘ஏஐ’ தொழில்நுட்பம் குறித்து பகிர்ந்துக் கொண்டார். “இப்போது இருக்கின்ற பெரிய பிரச்சினை ‘ஏஐ’. தொழில்நுட்பம் என்பது மனிதர்கள் கண்டுபிடித்தது. அது நம்மையே மீறி எங்கேயோ போகின்றது போல் இருக்கிறது. என்னுடைய புகைப்படங்களை ஏஐ-யில் மாப்பிங் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்து நான் சாக் ஆய்டேன். ‘ஏஐ’எரிச்சலூட்டும் விதமாகதான் இருக்கிறது. இது எங்கு போகுதுன்னு தெரியல. தொழில்நுட்பம் வளர வளர பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இது மிகப்பெரிய பயத்தை தருகிறது” என்றார்.
கீர்த்தி சுரேஷ் பேசியது தொடர்பாக நடிகர் விஜய் ஆன்டனியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "வரும் காலங்களில் ஏஐ தொழில்நுட்பத்தால் விவசாயிகள் அதிக அளவில் பயன்பெற வாய்ப்புள்ளது. மனிதனின் உழைப்பை எளிமைப்படுத்தும் ஒரு தளமாக தான் தற்போதைய ஏஐ தொழில்நுட்பம் விளங்கி வருகிறது" என்று தெரிவித்தார்.