குடியிருப்பு வளாகத்தில் துப்பாக்கி சூடு: பிரபல பாலிவுட் நடிகர் அதிரடி கைது

தனது துப்பாக்கியை பரிசோதிப்பதற்காக சுட்டு பார்த்ததாக நடிகர் கமல் கான் போலீசாரிடம் கூறியுள்ளார்.;

Update:2026-01-24 08:44 IST

மும்பை அந்தேரியில் உள்ள ஒஷிவரா குடியிருப்பு வளாகத்தில் கடந்த 18 ஆம் தேதி துப்பாக்கி சூடு நடைபெற்றது. குடியிருப்பு வாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். துப்பாக்கி சூடு நடத்தியது யார்? என்பது பற்றி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியதில் தடயவியல் அறிக்கை ஆய்வுக்கு பிறகு பிரபல பாலிவுட் நடிகர் கமல் ரஷித் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

உரிமம் பெற்று துப்பாக்கி வைத்து இருக்கும் கமல் கான், தனது துப்பாக்கியை பரிசோதிப்பதற்காக சுட்டு பார்த்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார். எனினும், அவரது இந்த செயலுக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். பாலிவுட் படங்களில் வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் கமல் கான் நடித்துள்ளார். படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்