டொவினோ தாமஸின் ‘பள்ளிச்சட்டம்பி' பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

இந்த படம் பான் இந்தியா அளவில் வருகிற ஏப்ரல் மாதம் 9ந் தேதி வெளியாக உள்ளது.;

Update:2026-01-24 08:32 IST

சென்னை,

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ், தமிழில் ‘அபியும் அனுவும்' என்ற படத்தில் நடித்துள்ளார். ‘மாரி-2' படத்தில் வில்லனாக மிரட்டினார்.

தற்போது டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் ‘பள்ளிச்சட்டம்பி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிற ஏப்ரல் மாதம் 9ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், நடிகர் டொவினோ தாமஸின் பிறந்தநாளையொட்டி, ‘பள்ளிச்சட்டம்பி' படத்தின் ‘பர்ஸ்ட் லுக்' போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டொவினோ தாமஸ் கூறும்போது, ‘இந்த படம் 1950-60 காலகட்டத்தில் நடக்கும் கதை. பொதுவாக பீரியட் படங்களில் நடிப்பது என்றாலே எனக்கு பெருமை தான். அந்த காலகட்டத்தை உணர்த்தும் இந்த வகை படங்களில் நடிப்பு சரியாக அமையும் பட்சத்தில், ரசிகர்கள் நெஞ்சில் இன்னும் நாம் அழுத்தமாக பதிவோம்', என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்