அடுத்த மாதம் திரைக்கு வருகிறது ஜிவி பிரகாஷின் 'அடங்காதே'

ஜி.வி.பிரகாஷ், சுரபி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’.;

Update:2025-05-02 07:26 IST

சென்னை,

அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'அடங்காதே'. இதில் இவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஸ்ரீ கிரீன் புரோடக்சன்ஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, புதிய போஸ்டர் வெளியிட்டு ஜிவி பிரகாஷின் 'அடங்காதே' அடுத்த மாதம் ( ஜூன்) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இவரே இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ரிலீஸ் தேதி , டிரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்