பிரபாஸின் 'சலார்' பட இசையை காப்பியடித்த ஹாலிவுட் படம்?

அப்படம் சமூக ஊடகங்களில் டிரோல் செய்யப்பட்டு வருகிறது.;

Update:2025-10-10 13:30 IST

சென்னை,

பிரபாஸின் பிளாக்பஸ்டர் படமான 'சலார்' மீண்டும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. என்ன காரணம் தெரியுமா?. புதிய ஹாலிவுட் படமான 'தி லாஸ்ட் பஸ்'-ன் புரோமோவில் உள்ள பின்னணி இசையின் ஒரு பகுதி, பிரசாந்த் நீலின் அதிரடி படமான சலாரின் பின்னணி இசையுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஒரு ரசிகர், “1:13 இல் இருந்து பின்னணி இசையைக் கேளுங்கள். அதே சாலார் பின்னணி இசைதான்” என்று கருத்து தெரிவித்தார். தென்னிந்திய சினிமாவின் செல்வாக்கு மிகவும் பெரியதாகிவிட்டதாகவும், ஹாலிவுட் கூட அதிலிருந்து காப்பியடிப்பதாகவும் பல ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், சலார் குழுவோ அல்லது தி லாஸ்ட் பஸ் குழுவோ இன்னும் அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.இருப்பினும், அப்படம் சமூக ஊடகங்களில் டிரோல் செய்யப்பட்டு வருகிறது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்