ஐதராபாத் பிரியாணி உலகிலேயே சிறந்தது - நடிகை பிரியங்கா சோப்ரா

ராஜமவுலி இயக்கிவரும் படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.;

Update:2025-11-15 17:06 IST

எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக "எஸ்எஸ்எம்பி 29" என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் ராஜமவுலி இயக்கும் இப்படத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.

அண்மையில் இந்தப் படத்தின் வில்லன் பிருத்விராஜின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில் கும்பா என்ற கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார். அதனை தொடர்ந்து தற்போது பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மஞ்சள் நிற புடவையில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இவர் இப்படத்தில் மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமவுலி, “உலக அரங்கில் இந்திய சினிமாவை மறுவரை செய்த பெண். மீண்டும் வருக. மந்தாகினியின் எண்ணற்ற சாயல்களை உலகம் காண காத்திருக்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.

ராஜமவுலி படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் இருக்கும் பிரியங்கா சோப்ரா சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், ஐதராபாத் பிரியாணியை இதுவரை சாப்பிட முயற்சித்தது இல்லையா? என கேட்டார். இதற்கு பதில் அளித்த பிரியங்கா சோப்ரா, “ஐதராபாத் பிரியாணிதான் உலகிலேயே சிறந்தது” என பதில் அளித்தார்.

படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா இன்று மாலை 7 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையினை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்