‘‘நான் உங்கள் இதயங்களை சரிசெய்யும் மெக்கானிக்''- நபா நடேஷ்

தனது மேனியில் கிரீஸ் தடவிக்கொண்டு, கவர்ச்சிகர புகைப்படங்களை நபா நடேஷ் வெளியிட்டுள்ளார்.;

Update:2025-08-19 06:17 IST

சென்னை,

தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் கவர்ச்சியில் கலக்கி வரும் நடிகை நபா நடேஷ், தென்னிந்திய சினிமா முழுவதும் கோலோச்ச ஆசைப்படுகிறார். தமிழ் சினிமாவிலும் கலக்க காத்திருக்கிறார். அவரை தமிழ் சினிமாவுக்கு கொண்டுவர முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் தனது மேனியில் கிரீஸ் தடவிக்கொண்டு, கவர்ச்சிகர புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். கார்களின் பின்னணியில் மெக்கானிக் போல காணப்படும் தனது புகைப்படங்களுடன், ‘‘உங்கள் இதயங்களை சரிசெய்யும் மெக்கானிக் நான். ஆனால் மன்னிக்கவும், வாரண்டி சொல்லமுடியாது'' என்ற வார்த்தைகளையும் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து கண்டபடி ‘கமெண்ட்'டுகளை ரசிகர்கள் அள்ளிவீச, சத்தமின்றி அதை படித்து சிரித்து வருகிறாராம், நபா நடேஷ்.

Tags:    

மேலும் செய்திகள்